மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே225 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்அமைச்சர் வழங்கினார் + "||" + Near Kovilpatti Free bicycle for 225 students Minister presented

கோவில்பட்டி அருகே225 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்அமைச்சர் வழங்கினார்

கோவில்பட்டி அருகே225 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்அமைச்சர் வழங்கினார்
கோவில்பட்டி அருகே 225 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
கோவில்பட்டி, 

கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூர் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ 225 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

பின்னர் அவர், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பள்ளி கல்வி திட்டத்தின்கீழ், 36 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவி உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு, கிழக்கு பார்க் ரோட்டில் கட்டப்படும் நகரசபை கட்டிடம் ஆகியவற்றையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் பரமசிவன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன், நகரசபை ஆணையாளர் அட்சயா, யூனியன் ஆணையாளர் கிரி, மாற்றுத்திறனாளிகள் நல ஒருங்கிணைப்பாளர் ராஜசெல்வி, பள்ளி துணை ஆய்வாளர் செல்ல குருசாமி, தலைமை ஆசிரியை சண்முகவடிவு,

அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.