நடுக்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி செயல்பாடு குறித்து மாணவர்களிடம் கலெக்டர் கலந்துரையாடல்
நடுக்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி செயல்பாடு குறித்து மாணவ-மாணவிகளிடம் கலெக்டர் ஷில்பா கலந்துரையாடினார்.
பேட்டை,
பேட்டை அருகே உள்ள நடுக்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நெல்லை மாவட்ட கலெக்டர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆங்கில வழிக்கல்வி பயிற்சி மாதிரி திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவ-மாணவிகளிடம் அவர் கலந்துரையாடினார்.
பின்னர் கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-
பயிற்சி வகுப்பில் பயிலும் மாணவ-மாணவிகள் ஆங்கில மொழி வழிக்கல்வியில் எழுதுதல், பேசுதல், கேட்டல், புரிதல் போன்ற பயிற்சியினை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.
மேலும் நெல்லை மாவட்டத்தில் கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சத்திரம் பாரதி பிரைமரி பள்ளி, முன்னீர்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாளையங்கோட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை மாநகராட்சி புதிய நடுநிலைப்பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகளில் இந்த மாதிரி பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
இந்த பள்ளிகளில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் வாரத்தில் 3 நாட்கள் ஆங்கில மொழி வழிக்கல்வி பயிற்சி நடத்தப்படுகிறது.
மேலும் 5 பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இடையே ஆங்கில மொழி தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டு, ஊக்கப்பரிசு வழங்கப்படும்.
இந்த மாதிரி திட்டம் வெற்றி பெறுவதையொட்டி நெல்லை மாவட்டத்தில் மற்ற பள்ளிகளில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரம்மநாயகம், சித்ரா, வாசுதேவன், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story