பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு


பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு
x
தினத்தந்தி 10 Jan 2019 10:45 PM GMT (Updated: 10 Jan 2019 8:02 PM GMT)

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

பெரம்பலூர்,

தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் பொது வினியோக திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் 2 அடி கரும்புத்துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் சிறப்பு பொங்கல் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதியும், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 8-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பும் மற்றும் சிறப்பு பொங்கல் பரிசு ரூ.ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.ஆயிரம் வழங்க தடை என்ற அதிரடி உத்தரவை நேற்று முன்தினம் பிறப்பித்தது. இதனால் பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங் களில் பொங்கல் பரிசு வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள் தங்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுவது நிறுத்தி விடுவார்கள் என்கிற ஒருவித அச்சத்தில் ரேஷன் கடைகளுக்கு படையெடுத்தனர். இதனால் நேற்று ரேஷன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பொதுமக்களை ஒழுங்கு படுத்தி நீண்ட வரிசையில் நிற்கவைத்து பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வாங்க அனுப்பினர். இதையடுத்து அவர்கள் ரேஷன் கடை ஊழியரிடம் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 வாங்கி சென்றனர். 

Next Story