மாவட்ட செய்திகள்

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண் பலாத்காரம்; கட்டிட தொழிலாளி கைது + "||" + Near Thiruvanninallur Female rape, Building worker arrested

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண் பலாத்காரம்; கட்டிட தொழிலாளி கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண் பலாத்காரம்; கட்டிட தொழிலாளி கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபா என்கிற பிரபாகரன் (வயது 26), கட்டிட தொழிலாளி.

இவர் அதே கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், இதுபற்றி திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்போரூர் அருகே தம்பியை வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது
திருப்போரூர் அருகே தாயை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த கூலித்தொழிலாளி தம்பியை வெட்டிக்கொலை செய்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
2. மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது
மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
3. மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவான தொழிலாளி கைது
மனைவியை கொலை செய்த வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவான தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
4. மஞ்சூர் அருகே மான் இறைச்சி வைத்திருந்த தொழிலாளி கைது
மஞ்சூர் அருகே மான் இறைச்சி வைத்திருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார். தலைமறைவான மற்றொருவரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. கடலூர் அருகே பரபரப்பு 50 அடி பள்ளத்தில் தள்ளி வாலிபர் கொலை
கடலூர் அருகே 50 அடி ஆழபள்ளத்தில் தள்ளி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய தொழிலாளியை கைது செய்த போலீசார், மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.