மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் ஆய்வு + "||" + Pongal gift collection Minister reviewed the task of providing

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் ஆய்வு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் ஆய்வு
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி 16-வது வார்டுக்கு உட்பட்ட பாபு ரோடு, தையல்காரத்தெரு பகுதியிலும் மற்றும் 18, 12-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளிலும் உள்ள ரேஷன்கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மலைக்கோட்டை,

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி 16-வது வார்டுக்கு உட்பட்ட பாபு ரோடு, தையல்காரத்தெரு பகுதியிலும் மற்றும் 18, 12-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளிலும் உள்ள ரேஷன்கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணியை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடம், பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் கொடுக்கப்படும். யாரும் நமக்கு கிடைக்குமோ, கிடைக்காதோ என்று பயப்பட வேண்டாம் என்றும், ஒரு சில கடைகளில் ரேஷன் அட்டைதாரர்கள் அதிகம் உள்ளதால் கொடுக்க கால தாமதம் ஏற்படுகிறது, என்றார். மேலும், கடைகளில் கொடுக்கப்படும் பொருட்கள் சரியான அளவில் உள்ளதா? என்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது பகுதி செயலாளர்கள் அன்பழகன், கலிலுல் ரஹ்மான், நிர்வாகிகள் வெல்லமண்டி பெருமாள், ஜவகர்லால் நேரு, பொன்.அகிலாண்டம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அதிகம் வாசிக்கப்பட்டவை