கோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
கோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுெவன உயர்ந்துள்ளது. 15 கிேலா தக்காளி கொண்ட ஒரு பெட்டி ரூ.600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோலார் தங்கவயல்,
ஆசியாவிலேயே 2-வது பெரிய தக்காளி மார்க்கெட்டாக கோலார் மார்க்கெட் செயல்படுகிறது. இந்த மார்க்கெட்டில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை தக்காளி விலை வரலாறு காணாத வகையில், வீழ்ச்சி அடைந்திருந்தது. 15 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டியின் விலை ரூ.100 முதல் ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதனால் தக்காளி விளைவித்த விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இதனால் அவர்கள் தக்காளிகளை சாலையோரம் கொட்டி சென்றனர். மேலும், தக்காளிக்கு ஆதரவு விலை வழங்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தினார்கள்.
கிடுகிடுவென உயர்வு
இந்த நிலையில் இந்த மாதம் 2-ந்தேதியில் இருந்து தக்காளி விலை ஏறுமுகமாக உள்ளது. தற்போது கோலார் தக்காளி மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் ரூ.100 முதல் ரூ.150-க்கு விற்பனையான 15 கிலோ தக்காளி கொண்ட ஒரு பெட்டி, தற்போது ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையாகிறது.
கடந்த ஒரு வாரத்தில் தக்காளி விலை பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோலார் தக்காளி மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது.
இன்னும் அதிகரிக்க வாய்ப்பு
இதுகுறித்து கோலார் மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கீழ்மட்டத்தில் இருந்த தக்காளி விலை தற்போது, பல மடங்கு உயர்ந்துள்ளது. கோலார் தக்காளி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. கோலார் ஏ.பி.எம்.சி. மார்க்கெட்டுக்கு கடந்த சில தினங்களில் 2,500 குவிண்டால் தக்காளி வந்துள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் கரும்பு அதிகளவில் பயிரிட்டுள்ளதால், கோலார் மாவட்டத்தில் தக்காளி விலை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளி வரத்து குறைந்தால், அதன் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story