காரைக்குடி அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிய பஸ்கள் அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
காரைக்குடி அரசு போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட 13 புதிய பஸ்களை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
சிவகங்கை,
தமிழகத்தில் போக்குவரத்து துறைக்கு 555 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் காரைக்குடி அரசு போக்குவரத்து கழகத்திற்கு 13 புதிய பஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய பஸ்களை வழிதடத்தில் இயக்கும் விழா, சிவகங்கை பஸ்நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில், செந்தில்நாதன் எம்.பி. முன்னிலையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் புதிய பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதிய பஸ்சில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்தார். பின்பு சிவகங்கை பஸ் நிலையத்திலிருந்து இடைய மேலூர், கூட்டுறவுப்பட்டி வழியாக சிவல்பட்டி கிராமத்திற்கு புதிய வழித்தடத்திற்கான பஸ்களை தொடங்கி வைத்தார்.
இதில் முன்னதாக வட்டாரப் போக்குவரத்துக் கழகம் மூலம் வாகனம் இயக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விளம்பர பதாகைகளை டிரைவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் அழகர்சாமி, அரசு போக்குவரத்து கழக மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன், கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஆனந்தன், கருணாநிதி, மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் சசிக்குமார், என்.எம்.ராஜா, பலராமன், அய்யனார், மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story