மாவட்ட செய்திகள்

செங்குறிச்சி அருகே செல்போன் கடை ஊழியர் கத்தியால் குத்திக்கொலை + "||" + Near the vertical Cellphone store employee with a knife stabbing murder

செங்குறிச்சி அருகே செல்போன் கடை ஊழியர் கத்தியால் குத்திக்கொலை

செங்குறிச்சி அருகே செல்போன் கடை ஊழியர் கத்தியால் குத்திக்கொலை
செங்குறிச்சி அருகே செல்போன் கடை ஊழியர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல், 

திண்டுக்கல் என்.எஸ்.நகரை சேர்ந்த சீனிவாசன் மகன் சிவக்குமார் (வயது 27). இவர், திண்டுக்கல் பஸ்நிலையத்தில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் அவருடைய நண்பரான அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்த ஹரிகரன் (23) என்பவரும் வேலைபார்த்து வருகிறார்.

இவருக்கு, நத்தம் அருகே உள்ள செங்குறிச்சியை சேர்ந்த ஒருவர் பணம் கொடுக்க வேண்டி இருந்தது. அதனை வாங்குவதற்காக, நேற்று இரவு ஹரிகரனும், சிவக்குமாரும் ஒரு மோட்டார் சைக்கிளில் செங்குறிச்சி அருகே உள்ள ஒரு தோட்டத்துக்கு சென்றனர். அப்போது, அங்கு பணம் வாங்கியவருக்கும் ஹரிகரன், சிவக்குமார் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவக்குமாரின் முதுகில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த சிவக்குமாரை, ஹரிகரன் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.