மாவட்ட செய்திகள்

செல்போன் தொலைந்ததால்எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை + "||" + Cellphone is missing Electrician hanging suicide

செல்போன் தொலைந்ததால்எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போன் தொலைந்ததால்எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் செல்போன் தொலைந்ததால் எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம், 


சேலம் அரிசிபாளையம் பஜனைமடம் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மகன் கதிரவன்(வயது 56), எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கதிரவன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் பிளேட் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் அடிக்கடி வலியால் அவதியுற்று வந்தார்.

இதனிடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு கதிரவன் ரூ.22 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஒன்றை தொலைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் செல்போன் தொலைந்து போன மன உளைச்சலில் அவர் காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கதிரவன் நேற்று காலை வீட்டில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தற்கொலை குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. நல்லம்பள்ளி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நல்லம்பள்ளி அருகே உள்ள வடக்கு கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2. சேலத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. சேந்தமங்கலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
சேந்தமங்கலம் அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. விழுப்புரம் அருகே ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
விழுப்புரம் அருகே ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
5. நாக்பாடாவில் 12 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீஸ் விசாரணை
மும்பை நாக்பாடாவில் 12 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.