மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி + "||" + Plastic awareness rally

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி
திருவொற்றியூரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல சுகாதாரத்துறை சார்பில், திருவொற்றியூரில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


பின்னர் பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கூடுதல் மாநகர நல அலுவலர் (வடக்கு) ராஜ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தை அடைந்தது. இது தொடர்பான துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களிடம் மாணவர்கள் வழங்கினர்.

இதில் மண்டல நல அலுவலர் இளஞ்செழியன், செயற்பொறியாளர்கள் வேலுச்சாமி, ராஜசேகர், துப்புரவு அலுவலர் அன்பழகன், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தலைஞாயிறு பகுதிகளில் 25 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
தலைஞாயிறு பகுதிகளில் 25 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. திருச்சியில் ஓட்டல்கள், டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை
திருச்சியில் ஓட்டல்கள், டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. திருவாரூர் ஒன்றிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் கடை உரிமையாளர்களுக்கு அபராதம்
திருவாரூர் ஒன்றிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
4. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: மளிகை கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
திருத்துறைப்பூண்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்திய மளிகை கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. திருச்சியில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் உரிமையாளர்களிடம் ரூ.1 லட்சம் அபராதம் வசூல்
திருச்சியில் 125 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உரிமையாளர்களிடம் ரூ.1½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.