மாவட்ட செய்திகள்

புழல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் சுமையால் பரிதாபம் + "||" + Near the puzhal Belonging to the same family 3 people commit suicide

புழல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் சுமையால் பரிதாபம்

புழல் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் சுமையால் பரிதாபம்
புழல் அருகே, கடன் சுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் திருமால் நகர் 5-வது தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சமில் அகமது (வயது 40). இவருடைய மனைவி தபு (35). இவர்களுடைய மகள் ஜெபின்தாஜ்(6).

வேலூரை சேர்ந்த இவர்கள், கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் இங்கு குடியேறினர். சமில்அகமது, புத்தகரம் வேல்முருகன் நகரில் புதிதாக செல்போன் கடை நடத்தி வந்தார்.


நேற்று முன்தினம் இரவு 3 பேரும் வீட்டில் இருப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து உள்ளனர். ஆனால் நேற்று மாலை 5 மணி வரை சமில்அகமதுவின் வீடு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளரான சந்திரிகா, கதவை தட்டிப்பார்த்தார். ஆனால் உள்புறமாக கதவு தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தபோது வீட்டின் உள்ள சமில்அகமது, அவருடைய மனைவி தபு, மகள் ஜெபின்தாஜ் 3 பேரும் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து அவர்கள் ஓடிவந்து பார்த்தனர். இதுபற்றி புழல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு மின்விசிறியில் மகள் ஜெபின்தாஜும், அதன் அருகில் உள்ள கொக்கியில் ஒரே கயிற்றில் கணவன்-மனைவியும் தூக்கில் பிணமாக தொங்கினர். முதலில் தங்கள் மகளை தூக்கில் போட்டு கொன்றுவிட்டு, பின்னர் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து போலீசார், 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில் கடன் சுமையால் சமில்அகமது தனது மனைவி மற்றும் மகளுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. சின்னசேலம் அருகே லாரி-கார் மோதல் சேலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலி
சின்னசேலம் அருகே லாரி-கார் மோதி நிகழ்ந்த கோர விபத்தில் சேலத்தை சேர்ந்தவர்கள் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
2. ஒரத்தநாடு அருகே நள்ளிரவில், தோட்டக்கலைத்துறை ஊழியரிடம் வழிப்பறி - 3 பேரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
ஒரத்தநாடு அருகே நள்ளிரவில் தோட்டக்கலைத்துறை ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
3. கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் வாகன சோதனை, என்.எல்.சி. தொழிலாளி உள்பட 3 பேரிடம் ரூ.3 லட்சம் பறிமுதல் - அதிகாரிகள் நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த வாகன சோதனையில் என்.எல்.சி. தொழிலாளி உள்பட 3 பேரிடம் ரூ.3¼ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. 6 தலைமுறையினர் ஒன்றுகூடினர்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 361 பேர் கொண்டாடிய காணும் பொங்கல்
சின்னாத்தேவர் ஆங்கிலேயர் காலத்தில் ரேகை சட்டத்தை எதிர்த்ததினால் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவருக்கு ஜெயில் சின்னாத்தேவர் என்று பெயர் வந்தது.