சமூக வலைத்தளத்தில் வீடியோ பார்த்து ஸ்கூட்டர் திருடிய போலீஸ்காரர் மகன் கைது


சமூக வலைத்தளத்தில் வீடியோ பார்த்து ஸ்கூட்டர் திருடிய போலீஸ்காரர் மகன் கைது
x

சமூக வலைத்தளத்தில் வீடியோ பார்த்து ஸ்கூட்டர்கள் திருடிய ஓய்வுபெற்ற போலீஸ்காரர் மகன், உடந்தையாக இருந்த கல்லூரி மாணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை மலாடு பகுதியில் சமீபத்தில் ஸ்கூட்டர் ஒன்று மாயமானது. அந்த ஸ்கூட்டரை வாலிபர் ஒருவர் திருடிச்செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த காட்சிகளை வைத்து போலீசார் சார்கோப் பகுதியை சேர்ந்த அவினாஸ்(வயது22) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர் தான் ஸ்கூட்டரை திருடியது தெரியவந்தது.

கல்லூரி மாணவர்கள்

அவினாஷ் ஓய்வுபெற்ற போலீஸ்காரரின் மகன் ஆவார். இவர் மலாடு பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவர், யு டியூப் வீடியோ மூலம் ஸ்கூட்டர்களை சாவியில்லாமல் இயக்குவதை கற்று உள்ளார். அதன்மூலம் நள்ளிரவு நேரங்களில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் ஸ்கூட்டர்களை திருடி விற்று வந்து உள்ளாா். போலீசார் அவரிடம் இருந்து 9 ஸ்கூட்டர்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவருக்கு இந்த திருட்டில் உடந்தையாக இருந்த மலாடை சேர்ந்த ருபேஷ்(21) என்ற கல்லூரி மாணவரையும் கைது செய்தனர்.

Next Story