சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 Jan 2019 3:09 AM IST (Updated: 12 Jan 2019 3:09 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீா்ப்பு கூறி உள்ளது.

தானே,

தானே மும்ரா பகுதியில் பெண் ஒருவர் உணவகம் நடத்தி வந்தார். அங்கு தினமும் முகமது மன்சூர் அலாம் அன்சாரி(வயது26) என்ற வாலிபர் சாப்பிட வருவார். அப்போது வாலிபருக்கும், உணவகம் நடத்தி வந்த பெண்ணின் 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதில், வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கற்பழித்தார். இதனால் சிறுமி கர்ப்பம் ஆனார்.

10 ஆண்டு ஜெயில்

இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை தானே செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

Next Story