மானாமதுரை துணை மின்நிலையத்திலிருந்து 15 கிராமங்களுக்கு மின் இணைப்பு


மானாமதுரை துணை மின்நிலையத்திலிருந்து 15 கிராமங்களுக்கு மின் இணைப்பு
x
தினத்தந்தி 11 Jan 2019 10:30 PM GMT (Updated: 11 Jan 2019 10:11 PM GMT)

மானாமதுரை மின்வாரியத்திலிருந்து 15 கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.

மானாமதுரை,

மானாமதுரையில் இருந்து 5 கி.மீ. து£ரத்தில் ஏ.விளாக்குளம், மேலப்பிடாவூர், கன்னிசேரி, பில்லத்தி, செய்யாலூர், சன்னதிபுதுக்குளம் உள்ளிட்ட 15 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 7 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு 36 கி.மீ தூரத்தில் உள்ள காளையார்கோவில் மின்வாரியத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

புதிய மின் இணைப்பு, மின்பழுது, பெயர் மாற்றம் உள்ளிட்ட அனைத்து வி‌ஷயங்களுக்கும் காளையார்கோவில் மின்வாரியத்திற்கு அலைந்து வந்தனர். இந்த 15 கிராமங்களை மானாமதுரையுடன் இணைக்க வலியுறுத்தி பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொடர்ந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக தற்போது ஏ.விளாக்குளம் உள்ளிட்ட 15 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 5 கி.மீ. து£ரத்தில் உள்ள மானாமதுரையில் இருந்து மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக செய்யாலூர் விலக்கில் இருந்து முத்துராமலிங்கபுரம் வரை 37 மின்கம்பங்கள் நடும் பணி நேற்று தொடங்கியது.

செய்யாலு£ர் விலக்கில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து முத்துராமலிங்கபுரம் வரை மின் இணைப்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இணைப்பு வழங்கப்பட்டு 15 கிராமங்களும் மானாமதுரையுடன் இணைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் 27 ஆண்டு கால போராட்டம் அலைச்சல் முடிவிற்கு வந்துள்ளது.

இதுகுறித்து கிராம மின்செயற்பொறியாளர் ஜெயபாண்டியம்மாள் கூறுகையில், 15 கிராம மக்கள் தொடர்ந்து மனு கொடுத்து வந்த நிலையில், அரசுக்கு பரிந்துரை செய்து தற்போது மானாமதுரை–தாயமங்கலம் ரோட்டில் இருந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 35 புதிய மின்கம்பங்கள் மூலம் 15 கிராமங்களுக்கும் மின்வினியோகம் செய்யப்படும் என்றார்.


Next Story