மாவட்ட செய்திகள்

துறையூர் அருகே வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி + "||" + Near Thuraiyur Vehicle collide Engineering student kills

துறையூர் அருகே வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி

துறையூர் அருகே வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலி
துறையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த பச்சைமலை டாப் செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 19). இவர் கரட்டாம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.


நேற்று குமரேசன் மோட்டார் சைக்கிளில் நண்பர் ஒருவரை ஏற்றிக்கொண்டு கரட்டாம்பட்டியை அடுத்த மீனாட்சிபுரத்திற்கு சென்றார். பின்னர் அவரை அங்கு விட்டு விட்டு மீண்டும் கரட்டாம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.

துறையூர்-திருச்சி மெயின் ரோட்டில் வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று குமரேசன் மீது மோதிவிட்டு நிற்காமல்சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் குமரேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வாகனம் மோதி தொழிலாளி சாவு: உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2. திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே வாகனம் மோதி மாற்றுத்திறனாளி முதியவர் படுகாயம் - 108-க்கு அழைத்தபோது 2 தனியார் ஆம்புலன்ஸ் வந்ததால் பரபரப்பு
திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த மாற்றுத்திறனாளி முதியவரை அழைத்து செல்ல 108-க்கு அழைத்தபோது 2 தனியார் ஆம்புலன்ஸ்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. திருவொற்றியூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி 9-ம் வகுப்பு மாணவர் பலி படிக்கட்டு பயணத்தால் விபரீதம்
திருவொற்றியூரில் மாநகர பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 9-ம் வகுப்பு மாணவர், தவறி விழுந்து, பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
4. ராமநத்தம் அருகே: வாகனம் மோதி வாலிபர் பலி - பிணத்தை பார்த்தபடி சாலையை கடந்தவர் கார் மோதி படுகாயம்
ராமநத்தம் அருகே வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது பிணத்தை பார்த்தபடி சாலையை கடந்தவர் கார் மோதி படுகாயம் அடைந்தார்.
5. குள்ளஞ்சாவடியில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல்; வாலிபர் பலி
குள்ளஞ்சாவடியில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.