ஆத்தூர் அருகே வேன் கவிழ்ந்து பெண் பக்தர்கள் உள்பட 16 பேர் காயம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றவர்கள்


ஆத்தூர் அருகே வேன் கவிழ்ந்து பெண் பக்தர்கள் உள்பட 16 பேர் காயம் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றவர்கள்
x
தினத்தந்தி 12 Jan 2019 11:00 PM GMT (Updated: 12 Jan 2019 4:06 PM GMT)

ஆத்தூர் அருகே, வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்ற பெண் பக்தர்கள் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர்.

ஆத்தூர், 

கோவை மாவட்டம் துடியலூர் காந்தி வீதியை சேர்ந்த 22 பெண்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு வேனில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு புறப்பட்டனர். வேனை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜவேலு (வயது 23) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்த வேன் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டி பிரிவு ரோடு அருகே வந்தபோது எதிரில் இருந்த சென்டர் மீடியன் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீர் பிரேக் போட்டார். அப்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த பெண் பக்தர்கள் சுதா (வயது 28), சித்ரா (47), கண்ணம்மாள் (47), சுமதி (36), விஜயா (40), தேவிகா (25), வனிதா (35), கலைமணி (30), பிரியா (28), இவரது மகன் சித்தார்த்தன் (5), ரத்னா (40), ராஜாமணி (52), உமா மகேஸ்வரி (29), அம்சவள்ளி (33), கமலாமணி (39), பாக்கியம் (49) ஆகிய 16 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து ஆத்தூர் புறநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story