மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத பெண்கள் விடுதி, முதியோர் இல்லங்கள் மீது நடவடிக்கை கலெக்டர் ஆசியா மரியம் எச்சரிக்கை


மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத பெண்கள் விடுதி, முதியோர் இல்லங்கள் மீது நடவடிக்கை கலெக்டர் ஆசியா மரியம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2019 10:30 PM GMT (Updated: 12 Jan 2019 4:13 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத பெண்கள் விடுதி மற்றும் முதியோர் இல்லங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆசியா மரியம் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல், 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் தனியாரால் நடத்தப்படும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கி உள்ள பெண்கள் விடுதி மற்றும் முதியோர் இல்லங்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதி மற்றும் தங்கும் இல்லங்கள் சட்டப்படி முறையாக மாவட்ட கலெக்டரிடம் பதிவு செய்து நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் சில விடுதிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் பதிவு செய்யப்படவில்லை.

எனவே இதுநாள் வரையில் முறையாக பதிவு செய்யப்படாத விடுதி மற்றும் இல்லங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் உடனடியாக பதிவு செய்திட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படாத விடுதிகள் மற்றம் இல்லங்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story