மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை + "||" + If parents do not go to school condemned Suicide by drinking poison plus-1 student

பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை

பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால்
விஷம் குடித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை
கூடலூர் அருகே பள்ளிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கூடலூர்,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுனன். கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில ஆண்டுகளாக கூடலூர் அருகே உள்ள கவுண்டன்பட்டி ஒத்தகளம் பகுதியில் ஒரு தனியார் தோட்டத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகிறார்.

அவருடைய மகன் கங்குலி (வயது 16). இவர், அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கங்குலி பள்ளிக்கு செல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் பெற்றோர் கங்குலியை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட கங்குலி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கங்குலி, பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம்
தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இறந்து போன 5 பேரின் உடல்களும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.
2. தாய், மனைவி, குழந்தைகளை கொன்று ஆசிரியர் தற்கொலை ஒரே குடும்பத்தில் 5 பேர் இறந்த பரிதாபம்
கோவை அருகே தாய், மனைவி மற்றும் குழந்தைகளை கொன்று விட்டு அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
3. வெடிமருந்து குடோன்களுக்கு சீல் வைக்கக்கோரி மண்எண்ணெய் கேன்களுடன் லாரியை சிறை பிடித்த பொதுமக்கள் தீக்குளிக்க போவதாக கூறியதால் பரபரப்பு
மூலனூர் அருகே வெடிமருந்து குடோன்களுக்கு சீல் வைக்கக்கோரி மண்எண்ணெய் கேன்களுடன் வந்து லாரியை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அப்போது தீக்குளிக்க போவதாக பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. விபத்தில் கை, கால் செயலிழந்ததால் விரக்தி: கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை
விபத்தில் கை, கால் செயலிழந்த விரக்தியில் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
5. புவனகிரி அருகே தீக்குளித்து மெக்கானிக் தற்கொலை அண்ணன் இறந்த சோகத்தில் விபரீத முடிவு
புவனகிரி அருகே தனது அண்ணன் இறந்ததால், சோகத்தில் இருந்த மெக்கானிக் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.