மங்களூரு அருகே ஜீப் ஆற்றில் பாய்ந்தது; பெண் சாவு- 3 பேருக்கு தீவிர சிகிச்சை


மங்களூரு அருகே ஜீப் ஆற்றில் பாய்ந்தது; பெண் சாவு- 3 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 12 Jan 2019 9:30 PM GMT (Updated: 12 Jan 2019 5:25 PM GMT)

மங்களூரு அருகே ஜீப் ஆற்றில் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தார். 3 பேருக்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவர்களுக்கு இந்த சோகம் நேர்ந்து உள்ளது.

மங்களூரு,

மங்களூரு அருகே முல்கி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கின்னிகோழி-சங்கலகேரி ஓடும் சாம்பவி ஆற்றுப்பாலத்தில் நேற்று ஒரு ஜீப் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், தாறுமாறாக ஓடியது. மேலும் ஆற்றுப்பாலத்தின் தடுப்பு சுவரை இடித்து கொண்டு ஆற்றில் பாய்ந்தது. இதில் ஜீப்பில் இருந்த ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.

மேலும் 3 பேர் உயிருக்கு போராடினார்கள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருமண நிகழ்ச்சியில் கலந்து..

முன்னதாக உயிரிழந்த பெண்ணின் உடலை அப்பகுதி மக்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி அறிந்த முல்கி போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவர் உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா போலா கிராமத்தை சேர்ந்த டயானா மஸ்கரன்கஸ்(வயது 45) என்பதும், மற்ற 3 பேரும் அவரது உறவினர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் மங்களூருவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய போது ஜீப், ஆற்றில் பாய்ந்ததும் தெரியவந்தது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து முல்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story