விழுப்புரத்தில் 11 புதிய பஸ்கள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்


விழுப்புரத்தில் 11 புதிய பஸ்கள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Jan 2019 3:00 AM IST (Updated: 12 Jan 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 11 புதிய பஸ்களை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம், 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பொதுமக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு 82 பஸ்கள் உள்பட 555 புதிய பஸ்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் விழுப்புரம் மண்டலத்திற்கு 29 பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 4 பஸ்கள் சென்னையில் இருந்து முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட் டது. இதன் தொடர்ச்சியாக 11 புதிய பஸ்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு விழுப்புரம் மண்டலம் சார்பில் சென்னை- சேலம், கள்ளக்குறிச்சி- சென்னை, சேலம்- சென்னை, திருவண்ணாமலை- சென்னை, புதுச்சேரி- சென்னை ஆகிய வழித்தடங்களில் 11 பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் கலெக்டர் சுப்பிர மணியன், ஏழுமலை எம்.பி., குமரகுரு எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் கணேசன், கிளை மேலாளர்கள் ராஜசேகரன், முருகதாஸ், சுந்தர்ராஜன், கோட்ட மேலாளர் துரைசாமி, ஆவின் தலைவர் பேட்டை முருகன், கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைத்தலைவர் வண்டிமேடு ராமதாஸ், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் வக்கீல் செந்தில், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கோல்டுசேகர், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், ஆனாங்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் என்ஜினீயர் ரமேஷ், முன்னாள் மாவட்ட பேரவை இணை செயலாளர் அசோக்குமார், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர்கள் புஷ்பலதா கோதண்டராமன், ரகுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story