சென்டிரல் ரெயில் நிலையத்தில் கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு


சென்டிரல் ரெயில் நிலையத்தில் கல்லூரி பேராசிரியையிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 13 Jan 2019 3:30 AM IST (Updated: 13 Jan 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

சென்டிரல் ரெயில் நிலையத்தில் கல்லூரி பேராசிரியையிடம் அடையாளம் தெரியாத வாலிபர் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார்.

சென்னை,

சென்னை கிண்டியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவரது மனைவி ஜீவா (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று திருப்பூர் செல்வதற்காக சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்தார்.

பின்னர் கோவை இன்டர்சிட்டி ரெயிலின் முன்பதிவற்ற பெட்டியில் ஏற முயன்றார். பொங்கல் பண்டிகை விடுமுறை காரணமாக ரெயிலில் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது. இதனால் ஜீவா முன்பதிவற்ற பெட்டியில் கதவின் அருகே நின்றார். ரெயில் சென்னை சென்டிரலில் இருந்து வெளியே செல்ல தொடங்கியது. அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ஜீவாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார்.

இதுகுறித்து ஜீவா சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை தேடி வருகின்றனர்.

Next Story