வாகன நிறுத்தத்துக்கு அதிக கட்டணம் வசூல்: ஊட்டியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வாகன நிறுத்தத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து ஊட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊட்டி,ஜன.13–
ஊட்டியில் வாகன நிறுத்தத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஜயன், இணை செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. வாகனங்களை நிறுத்துவதற்கு பெரிய அளவில் இடவசதி இல்லாததால், நகராட்சி சாலையோரங்களில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு நகராட்சி மூலம் வாகன கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர்கள் அதிக கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை. உரிய கட்டணத்தை வசூலிக்கவும், தேசிய நெடுஞ்சாலை மற்றும் தனியார் இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.