போதைப்பொருளுடன் நைஜீரியர்கள் உள்பட 3 பேர் கைது
போதைப்பொருளுடன் நைஜீரியர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை முல்லுண்டு- கோரேகாவ் லிங்க் ரோட்டின் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகப்படும் வகையில் அந்த வழியாக வந்த தனியார் வாடகை காரை போலீசார் வழிமறித்து சோதனை போட்டனர்.
இதில், அந்த காரில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ‘கோகைன்’ என்ற போதைப்பொருளை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதையடுத்து காரில் இருந்த டிரைவர் பிரவின் மற்றும் நைஜீரிய நாட்டை சேர்ந்த இனோக் மெரிட் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ரூ.3 லட்சம் போதைப்பொருள்
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், நவிமும்பையில் பதுங்கி இருந்த ஜார்சிகு டாசில்வர் என்ற நைஜீரியரை கைது செய்தனர். அவரிடம் இருந்தும் போலீசார் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.
மேலும் கைது செய்யப்பட்ட நைஜீரியர்கள் இருவரும் சட்டவிரோதமாக மும்பையில் தங்கியிருந்தது தெரியவந்தது. இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story