தோட்டக்கலை துறையின் மூலம் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி


தோட்டக்கலை துறையின் மூலம் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி
x
தினத்தந்தி 12 Jan 2019 10:41 PM GMT (Updated: 12 Jan 2019 10:41 PM GMT)

தோட்டக்கலை துறையின் மூலம் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சிவகங்கை,

மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ராஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– தோட்டக்கலை துறையின் மூலம் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக தொழில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்களில் பணி பெறுவதற்கான ஒரு வருடகாலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓராண்டு பயிற்சி முடித்த பின் தொழில் முனைவோர் பயிற்சி மையத்தினர் நடத்தும் ஆன்லைன் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற வேண்டும்.

அதன்பின்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் மாநில, மத்திய மற்றும் அயல்நாடுகளில் பணிபுரிய வாய்ப்பளிக்கிறது. பயிற்சி காலத்தில் மாதம் ரூ.7 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 10–ம் வகுப்பு அல்லது 12–ம் வகுப்பு படித்து அத்துடன் தோட்டக்கலை துறையில் டிப்ளமோ இருத்தல் வேண்டும். இதுதொடர்பான மேலும் விவரங்களை சிவகங்கையில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்


Next Story