பயணத்திற்கான பலகாரங்கள்
பெண்கள் வெளி இடங்களுக்கு புறப்பட்டு செல்லும்போது தங்களுக்கு தேவையான பொருட்களை கைப்பையில் எடுத்து வைப்பதற்கு மறக்கமாட்டார்கள்.
பெண்கள் வெளி இடங்களுக்கு புறப்பட்டு செல்லும்போது தங்களுக்கு தேவையான பொருட்களை கைப்பையில் எடுத்து வைப்பதற்கு மறக்கமாட்டார்கள். அவற்றுள் ஒருசில பொருட்கள் சுமையாகிவிடுவதும் உண்டு. அழகு சாதன பொருட்களை மறக்காமல் எடுத்து வைப்பதுபோல் உடல் ஆரோக்கியம் காக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்களையும் தவறாமல் உடன் எடுத்து செல்வது அவசியமானது. அவை உற்சாகத்துடன் பயணத்தை தொடர்வதற்கு வழிவகை செய்யும்.
பாதாம் பருப்புகளை மறக்காமல் உடன் எடுத்து சென்று சாப்பிட வேண்டும். அது உடல் வலுவை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். அன்றாடம் உடலுக்கு தேவையான வைட்டமின் இ சத்துகளில் 30 சதவீதத்தை பாதாம் பருப்பு பூர்த்தி செய்துவிடும். குறைந்தபட்சம் 5 பாதாம் பருப்பாவது தினமும் சாப்பிட வேண்டும். வெளி இடங்களுக்கு செல்வதற்கு முந்தைய தினம் இரவில் பாதாம் பருப்புகளை நீரில் ஊறவைத்து எடுத்து செல்வது நல்லது. நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதற்கு பதிலாக பாதாம் பருப்பை சாப்பிடலாம். பாதாம் பருப்புடன் தயிர் கலந்தும் ஊற வைத்து சாப்பிடலாம்.
பிஸ்கெட் சாப்பிட பிரியப்படுபவர்கள் ஓட்ஸ் கலந்த பிஸ்கெட் வகைகளையும் உடன் எடுத்து செல்லலாம். அவை வெளியிட பயணங்களின்போது செரிமான அமைப்பு சீராக இயங்குவதற்கு துணை புரியும். நொறுக்குதீனிகள் சாப்பிட விருப்பப்படுபவர்கள் புரதம் கலந்த குக்கீஸ்கள், சாக்லேட்டுகள், தின்பண்டங்களை உடன் எடுத்து செல்லலாம். அவை பயணங்களின்போது பசியை கட்டுப்படுத்த உதவும். உலர் தானியங்கள், உலர் பழ வகைகளும் பயணங்களின் போது சாப்பிடுவதற்கு ஏற்றவை. பூசணி விதைகளையும் எடுத்து செல்லலாம். இப்போது பூசணி விதைகளில் ஏராளமான பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை சுவையாக இருப்பதோடு ஆரோக்கியத்தையும் காக்கும்.
Related Tags :
Next Story