குளிரும்.. கொய்யா பழமும்..
குளிர்காலத்தில் தவறாமல் கொய்யா பழங்களை சாப்பிட வேண்டும். அதிலிருக்கும் தாதுக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
குளிர்காலத்தில் தவறாமல் கொய்யா பழங்களை சாப்பிட வேண்டும். அதிலிருக்கும் தாதுக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர்காலத்தில் கொய்யா பழங்களை சாப்பிட வேண்டும்.
கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.
கொய்யாப்பழத்தில் கார்போஹைட்ரேட் அளவு மிகவும் குறைவு. குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்டிருக்கும் உணவுகளை சாப்பிடுவது எடை குறைப்புக்கு உதவும் என்பது பலகட்ட ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொய்யாப்பழத்தில் கலோரியும் குறைவுதான். அதனால் எடை இழப்புக்கு தூண்டு கோலாக அமையும்.
புரதத்திற்கு பசியை தூண்டும் ஹார்மோனை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உண்டு. கொய்யாப்பழத்தில் புரதம் அதிகமாகவே இருப்பதால் தினமும் சாப்பிட்டு வரலாம்.
குடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் வைட்டமின் பி-க்கு முக்கிய பங்கு இருக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி1, பி3, பி6 ஆகியவை நிறைந்திருக்கின்றன. அவை செரிமானம் சீராக நடைபெற உதவி செய்வதோடு வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும் தன்மை கொண்டவை. எடை இழப்புக்கும் துணைபுரிபவை. அதனால் கொய்யாப்பழத்தை தவிர்க்காமல் சாப்பிட்டு வருவது நல்லது.
நீரிழிவு நோயாளிகளும் கொய்யாப்பழம் சாப்பிடலாம். அதிகபடியான இன்சுலின் தடுப்பு மருந்து உபயோகிக்கும்போது உடல் எடை அதிகரிக்கும். இன்சுலினின் செயல்பாடு சீராக நடைபெறுவதற்கு கொய்யாப்பழம் உதவும்.
கொய்யாப்பழ இலைகளை கொண்டு தேனீர் தயாரித்தும் பருகலாம். நீரிழிவு பிரச்சினைக்கு அது நிவாரணம் தரும்.
Related Tags :
Next Story