அந்தியூர் கால்நடை சந்தையில் பர்கூர்இன காளை மாடு ஜோடி ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனை


அந்தியூர் கால்நடை சந்தையில் பர்கூர்இன காளை மாடு ஜோடி ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 13 Jan 2019 10:15 PM GMT (Updated: 13 Jan 2019 12:56 PM GMT)

அந்தியூர் கால்நடை சந்தையில் பர்கூர் இன காளை மாடு ஜோடி ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.

அந்தியூர், 

அந்தியூர் கால்நடை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுகிழமை நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடந்த சந்தைக்கு அந்தியூர், பர்கூர், மேட்டூர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பண்ணவாடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நேற்று முன்தினம் இரவே கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வந்து இருந்தனர்.

இதில் பர்கூர் இன காளைமாடு ஜோடி ரூ.30 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரையும், நாட்டுகாளை மாடு ஜோடி ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும் விற்பனை ஆனது.

இதேபோல் பர்கூர் இன பசுமாடு ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், ஜெர்சி மாடு ஒன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், சிந்து மாடு ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், நாட்டு பசுமாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், எருமைமாடு ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், கன்றுக்குட்டி ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும், விற்பனை ஆனது.

ஈரோடு, எடப்பாடி, ஆப்பக்கூடல், கவுந்தப்பாடி மற்றும் கேரளா, மைசூரு உள்பட பல்வேறு பகுதியில் இருந்து வந்த வியாபாரிகள் மாடுகளை விலைபேசி பிடித்துச்சென்றனர்.

Next Story