மாவட்ட செய்திகள்

குடும்ப தகராறில்தூக்குப்போட்டு பெண் தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை + "||" + Family dispute The woman committed suicide Assistant Collector investigation

குடும்ப தகராறில்தூக்குப்போட்டு பெண் தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை

குடும்ப தகராறில்தூக்குப்போட்டு பெண் தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை
மத்திகிரியில் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
மத்திகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி எஸ்.எம். நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி நளினி (வயது 27). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நளினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் அங்கு சென்று நளினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் நளினி இறந்துள்ளதால் அவரது தற்கொலை தொடர்பாக ஓசூர் உதவி கலெக்டர் விமல் ராஜூம் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து பெண் தற்கொலை
ஜக்குபட்டியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மனைவி அழகுராணி விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
2. மகனை கணவர் அழைத்து சென்றதால் விரக்தி, கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
மகனை கணவர் அழைத்து சென்றதால் விரக்தி அடைந்த பெண், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3. கடலூர் சில்வர் பீச்சில், செஞ்சியை சேர்ந்த பெண் கடலில் இறங்கி தற்கொலை முயற்சி-குழந்தை சாவு
கடலூர் சில்வர் பீச்சில் செஞ்சியை சேர்ந்த பெண் தனது 8 மாத பெண் குழந்தையுடன் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது குழந்தை பரிதாபமாக செத்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
4. முத்திரையர்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை
புதுவை முத்திரையர்பாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டார்.
5. சூரில் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு பெண் தற்கொலை
ஓசூரில் குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.