குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 14 Jan 2019 3:45 AM IST (Updated: 13 Jan 2019 10:15 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மல்லசமுத்திரம்,

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள ராமாபுரம் மேட்டுவளவை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 37), கூலிதொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தனசேகரன் தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்றும் இது தொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த தனசேகரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மல்லசமுத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குழந்தை இல்லாத ஏக்கத்தில் தனசேகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story