மாவட்ட செய்திகள்

திருக்கோவிலூர் அருகேஇளம்பெண் விஷம் குடித்து தற்கொலைதாய் திட்டியதால் விபரீத முடிவு + "||" + Near Tirukovilur The teenager succumbs to suicide by drinking poison The dreadful decision of the mother

திருக்கோவிலூர் அருகேஇளம்பெண் விஷம் குடித்து தற்கொலைதாய் திட்டியதால் விபரீத முடிவு

திருக்கோவிலூர் அருகேஇளம்பெண் விஷம் குடித்து தற்கொலைதாய் திட்டியதால் விபரீத முடிவு
திருக்கோவிலூர் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகள் ஜீவிதா (வயது 17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஜீவிதாவிடம், அவருடைய தாய் காந்தி ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

ஆனால் ஜீவிதா ரேஷன் கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவருடைய தாய், ரேஷன் பொருட்கள் வாங்க செல்லாமல் வீட்டில் இருக்கிறாய்? என ஜீவிதாவை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஜீவிதா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயக்கமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ஜீவிதா உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை வெவ்வேறு சம்பவங்களில் பரிதாபம்
சோளிங்கர், அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தில் 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
2. தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை போலீசார் விசாரணை
தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
4. பவானி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
பவானி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
5. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு எலக்ட்ரீசியன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு எலக்ட்ரீசியன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றார்.