தூத்துக்குடியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி


தூத்துக்குடியில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டி
x
தினத்தந்தி 13 Jan 2019 10:45 PM GMT (Updated: 13 Jan 2019 5:47 PM GMT)

தூத்துக்குடியில் போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகளை போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சார்பில் போலீஸ்- பொதுமக்கள் இடையேயான பொங்கல் விழா நல்லுறவு விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி திரேஸ்புரம் தோமையார் ஆலயம் அருகே நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தும், 100 பேருக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான பழகுனர் உரிமத்தையும் வழங்கி பேசினார்.

அப்போது, அவர் கூறுகையில், ‘இந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் உங்களுக்கான போலீஸ் நிலையம். இங்கு நீங்கள் தயங்காமல், பயப்படாமல் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம். இங்கு 99 சதவீதம் பேர் நல்லவர்களாக இருப்பீர்கள். ஒரு சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடலாம். அவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் அச்சமின்றி வாழலாம். உங்களோடு பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது‘ என்றார்.

தொடர்ந்து கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ரேனியஸ் ஜேசுபாதம், வனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜாமணி, ஞானராஜ், மயிலேறும் பெருமாள், திரேஸ்புரம் பங்கு தந்தை லயோலா, நாட்டுப்படகு மீனவர் சங்கம் ராஜ், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கிளமண்ட், மீனவர் வட்டக்காரர் சங்க தலைவர் பெர்க்மான்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story