மாவட்ட செய்திகள்

கல்லிடைக்குறிச்சி அருகேஇளம்பெண் தீக்குளித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை + "||" + Near Kallidai Karkchi The teenager ignited and committed suicide Assistant Collector investigation

கல்லிடைக்குறிச்சி அருகேஇளம்பெண் தீக்குளித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை

கல்லிடைக்குறிச்சி அருகேஇளம்பெண் தீக்குளித்து தற்கொலைஉதவி கலெக்டர் விசாரணை
கல்லிடைக்குறிச்சி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
அம்பை, 

நெல்லை மாவட்டம் அம்பை தாலுகா கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தென்பத்திமேடு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலி தொழிலாளி. அவருடைய மனைவி இந்திரா (வயது 26). இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த இந்திரா தன்னுடைய உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பலத்த தீக்காயம் அடைந்த அவரை மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் இந்திரா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுப்பழக்கத்தால் மனைவியுடன் தகராறு தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
மதுப்பழக்கத்தால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
2. 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை வெவ்வேறு சம்பவங்களில் பரிதாபம்
சோளிங்கர், அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தில் 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
3. தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை போலீசார் விசாரணை
தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தற்கொலை
சேலத்தில் வெவ்வேறு இடங்களில் 2 பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
5. பவானி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
பவானி அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தொழிலாளி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.