பரங்கிமலையில் போலீஸ் குடும்பத்தினர் பொங்கல் விழா கமிஷனர் பங்கேற்பு


பரங்கிமலையில் போலீஸ் குடும்பத்தினர் பொங்கல் விழா கமிஷனர் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Jan 2019 3:45 AM IST (Updated: 14 Jan 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸ் குடும்பத்தினர் பங்கேற்ற பொங்கல் விழா நடைபெற்றது.

ஆலந்தூர்,

விழாவை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில் பெண் போலீசார் மற்றும் போலீசாரின் குடும்பத்தினர் கலந்துகொண்டு 200 பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர். விழாவில் தப்பாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் நடந்தது.

போலீசாருக்கு கயிறு இழுக்கும் போட்டி, ஓட்டப்பந்தயம், பானை உடைக்கும் போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பரிசுகளை வழங்கினார். இதில் போலீஸ் இணை கமிஷனர்கள் அருண், பாலகிருஷ்ணன், பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

எப்போதும் பணிச்சுமையால் மன அழுத்தத்துடன் காணப்படும் தங்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடிய இந்த பொங்கல் விழா மன நிறைவை அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story