சிதம்பரம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நகை அபேஸ்


சிதம்பரம் பஸ் நிலையத்தில் பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நகை அபேஸ்
x
தினத்தந்தி 13 Jan 2019 10:00 PM GMT (Updated: 13 Jan 2019 6:56 PM GMT)

சிதம்பரம் பஸ்நிலையத்தில் பெண்ணிடம் மர்ம மனிதர்கள் ரூ.1½ லட்சம் மதிப்பிலான நகையை அபேஸ் செய்து சென்றனர்.

சிதம்பரம், 

சிதம்பரம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி மலர்விழி(60). இவர் கடலூர் செல்வதற்காக சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்து கடலூர் வரும் பஸ்சில் ஏறிய போது கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால் அவர் வேறு பஸ்சில் செல்லலாம் என்று நினைத்து, அதில் இருந்து இறங்கி விட்டார்.

சிறிது நேரத்திற்கு பின்னர், அவர் கழுத்தில் பார்த்தார். அப்போது அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையை பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம மனிதர்கள் அபேஸ் செய்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மலர்விழி இதுகுறித்து நகர போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story