மாவட்ட செய்திகள்

சேலம் வீராணம் அருகேசுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி + "||" + Near Salem Viranam The wall collapses and the worker kills

சேலம் வீராணம் அருகேசுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

சேலம் வீராணம் அருகேசுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
சேலம் வீராணம் அருகே சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம், 


சேலம் வீராணம் அருகே உள்ள அல்லிக்குட்டை வள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவருடைய மகன் பிரபு (வயது 23). குட்டைக்காடு சின்னனூர் பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

மன்னார்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் காட்டு ராஜா (30). கட்டிட தொழிலாளி. நேற்று பிரபு வீட்டிற்கு காட்டுராஜா மற்றும் அவருடன் சேர்ந்து தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். பின்னர் அந்த வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டும் பணியில் காட்டு ராஜா ஈடுபட்டு இருந்தார். அப்போது அருகில் குடிநீர் தொட்டிக்காக கட்டப்பட்டு இருந்த சுவர் இடிந்து அவர் மீது விழுந்தது. இதில் மூளை சிதறி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே காட்டு ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காட்டு ராஜா இறந்ததை அறிந்த அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அவர்கள் காட்டுராஜா உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த காட்டு ராஜாவுக்கு, அமுதா (27) என்ற மனைவியும், லட்சுதா (7), ஹரிகரன் (3) என 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது கிரேனில் இருந்து கல் விழுந்து தொழிலாளி பலி
கிணற்றை ஆழப்படுத்தும் பணியின்போது கிரேனில் இருந்து கல் விழுந்து தொழிலாளி பலியானார்.
2. ஆலங்குளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
ஆலங்குளம் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்டதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
3. காங்கேயம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு
காங்கேயம் அருகே கீழ் பவானி வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலியானார்.
4. தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி உறவினர் படுகாயம்
தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார். உடன் சென்ற உறவினர் படுகாயம் அடைந்தார்.
5. உளுந்தூர்பேட்டை அருகே: ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி - போலீசார் விசாரணை
உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.