ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2019 4:45 AM IST (Updated: 14 Jan 2019 3:15 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த செய்யும் மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவதற்கும், திருவாரூர் அருகே திருக்காரவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்தும் திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு தி.மு.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் தலைமை தாங்கினார்.அப்போது அவர் பேசியதாவது:–

மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. காவிரி டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக்கும் நோக்கத்துடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்திட மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு துணை போகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த விட மாட்டோம். பொங்கல் பண்டிகைக்கு பின்பு மக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். விவசாயத்தை பாதுகாத்திட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மாசிலாமணி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் பாலச்சந்தர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன், தி.க. மாவட்ட தலைவர் மோகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பஜ்லுல்ஹக், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட தலைவர் தமீம்அன்சாரி, சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story