மாவட்ட செய்திகள்

மும்பை தாதரில் ஓடும் ரெயிலில் இருந்து குதிக்க முயன்ற சிறுமியை மீட்ட பள்ளி மாணவர்கள் போலீசார் பாராட்டு + "||" + From the running train Recover the little girl trying to jump School students

மும்பை தாதரில் ஓடும் ரெயிலில் இருந்து குதிக்க முயன்ற சிறுமியை மீட்ட பள்ளி மாணவர்கள் போலீசார் பாராட்டு

மும்பை தாதரில் ஓடும் ரெயிலில் இருந்து குதிக்க முயன்ற சிறுமியை மீட்ட பள்ளி மாணவர்கள் போலீசார் பாராட்டு
மும்பை கொலபாவில் ராணுவ அதிகாரியாக இருந்து வருபவர் உபேஷ் ராய். இவர் நேற்று முன்தினம் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மாதேரானுக்கு சுற்றுலா செல்வதற்காக தாதர் ரெயில் நிலையம் வந்தார்.
மும்பை,

அங்கு பிளாட்பாரம் நம்பர் 4-ல் வந்த மின்சார ரெயிலில் அவரது மனைவி மரினா மற்றும் மகள் சாயிஷா (வயது7) ஏறினர்.

இந்தநிலையில், உபேஷ் ராய் தனது நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்ததால் அவர் மின்சார ரெயிலில் ஏறவில்லை. அப்போது, ரெயில் கிளம்பி விட்டது. இதனால் பதறிப்போன மரினா உடனடியாக ஓடும் ரெயிலில் இருந்து இறங்கினார். தாய் தன்னை விட்டு விட்டு இறங்கியதால் சிறுமி சாயிஷா பதறினாள். திடீரென அவள் வேகமாக சென்ற ரெயிலில் இருந்து அழுதபடி பிளாட்பாரத்தில் குதிக்க முயன்றாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த 2 பள்ளி மாணவர்கள் சிறுமியை குதிக்க விடாமல் பிடித்து கொண்டனர். இதனால் சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினாள்.


இதற்கிடையே, மகள் ரெயிலில் சென்று விட்டதால் பதற்றமடைந்த உபேஷ் ராய் மற்றும் அவரது மனைவி தாதர் ரெயில்வே போலீசாரிடம் இதுபற்றி தெரிவித்து உதவி கோரினர். உடனடியாக அவர்கள் மாட்டுங்கா மற்றும் குர்லா ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த நிலையில், சிறுமியை மீட்ட பள்ளி மாணவர்கள் இருவரும் அவளுடன் மாட்டுங்கா ரெயில் நிலையத்தில் இறங்கினர். பின்னர் அவர்களை அறிந்து கொண்ட மாட்டுங்கா ரெயில்வே போலீசார் சிறுமியுடன் அந்த பள்ளி மாணவர்களையும் தாதர் ரெயில்வே போலீசாரிடம் அழைத்து வந்தனர். அங்கு சாயிஷா பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். சிறுமி சாயிஷாவை மீட்ட மாணவர்கள் கல்வாவை சேர்ந்த இஸ்மாயில் சேக், முகமது சேக் என்பது தெரியவந்தது. மாணவர்கள் இருவரையும் போலீசார் வெகுவாக பாராட்டினர்.