வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சாமளாபுரம் பேரூராட்சி பள்ளபாளையத்தில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மங்கலம்,
மங்கலத்தை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி பள்ளபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 38). இவர் அந்த பகுதியை சேர்ந்த பாலன் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். இந்த நிலையில் முருகேசன் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ஆட்டோவை தனது வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை 5 மணிக்கு அந்த ஆட்டோ திடீரென்று தீப்பிடித்து எரிவதை அந்த வழியாக சென்ற முருகேசனின் மாமியார் மேரி ரோசாலி பார்த்து முருகேசனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே அருகில் உள்ளவர்கள் அனைவரும் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர். இது குறித்து மங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். பின்னர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாலன் கொடுத்த புகாரின் மங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.