ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில் பூமிக்கு நன்றி செலுத்தி சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்


ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில் பூமிக்கு நன்றி செலுத்தி சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 Jan 2019 10:00 PM GMT (Updated: 14 Jan 2019 7:56 PM GMT)

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங் களில் பிரபஞ்சத்திற்கும் பூமிக்கும் நன்றி செலுத் தும் விதமாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

அரியலூர் ,

மேலும் தமிழர் களின் பாரம்பரிய விழா வினை வரவேற்கும் விதமாக சமத்துவ பொங்கல் வைத்து பிரபஞ்சத்திற்கும் பூமிக்கும் நன்றி கூறினர். கல்வி நிறுவன வளாகங்களில் கோலமிட்டு புதுப்பானை யில் பச்சரிசியை யிட்டு மஞ்சள் வைத்து பொங்கல் செய்து பின்பு வாழைப் பழம் செங்கரும்பு வைத்து பிரபஞ்சத்திற்கும் பூமிக்கும் நன்றி சொல்லும் விதமாக அனைவரும் வானத்தை யும் பூமியையும் நோக்கி மாணவ, மாணவிகள் நன்றி செலுத்தினர்.

விழாவில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு தாளாளர் முத்துக்குமரன் பரிசுபொருட்கள் வழங்கி பாராட்டினார்.

சிறப்பு விருந்தினர்களாக அறிவியல் ஆசிரியர் செங்குட் டுவன், அரியலூர் அரிமா சங்க பொருளாளர் ராஜா, செயலாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவி களை வாழ்த்தி பேசினர்.

முன்னதாக துணைத் தலைவர் உஷா வரவேற்றார். முடிவில் பள்ளி முதல்வர் தாரணி நன்றி கூறினார்.

Next Story