திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்


திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Jan 2019 3:45 AM IST (Updated: 15 Jan 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசாக வேட்டி, சட்டை மற்றும் சேலை வழங்கும் விழா திருவண்ணாமலை பெரிய தெருவில் நடந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை நகர அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசாக வேட்டி, சட்டை மற்றும் சேலை வழங்கும் விழா திருவண்ணாமலை பெரிய தெருவில் நடந்தது. விழாவுக்கு திருவண்ணாமலை நகர செயலாளர் ஜெ.எஸ்.செல்வம் தலைமை தாங்கினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, திருவண்ணாமலை நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேட்டி, சட்டை, சேலை மற்றும் காலண்டர் ஆகியவற்றை வழங்கினார்.

இதில் முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி, தூசி மோகன் எம்.எல்.ஏ., மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன், திருவண்ணாமலை 7-வது வார்டு வட்ட பிரதிநிதி எம்.மணிகண்டன், 10-வது வார்டு இளைஞர் அணி செயலாளர் ஜி.அமுதவேலு, சித்த மருத்துவர் பழனி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story