‘ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை விரைவில் அமல்’ முதன்மை கல்வி அதிகாரி தகவல்
ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையை விரைவில் அமல்படுத்த உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பழனிசாமி தெரிவித்தார்.
கடலூர்,
பள்ளிக்கூடங்களில் ஆசி ரியர்களின் வருகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து பயோமெட்ரிக் எந்திரத்தை இயக்குவது எப்படி? வருகை பதிவு செய்வது எப்படி? என்பது குறித்து கடலூர் மாவட்ட அரசு, உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர் களுக்கான பயிற்சி கடலூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட கல்வி அதிகாரிகள் சாமிமுத்தழகன், செல்வராஜ், திருமுருகன், செல்வகுமார், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கள் மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் கலந்து கொண்ட னர். காலையில் கடலூர், சிதம்பரம் கல்வி மாவட்டங் களை சேர்ந்த ஆசிரியர் களுக்கும், மாலையில் வடலூர், விருத்தாசலம் கல்வி மாவட் டங்களை சேர்ந்த ஆசிரியர் களுக்கும் பயிற்சி அளிக்கப் பட்டது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பழனிசாமி கூறுகையில், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் பயோமெட்ரிக் எந்திரம் மூலம் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதை முன்னிட்டு பயோ மெட்ரிக் எந்திரத்தை கையாளும் முறை, அதில் வருகையை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் தலா 2 பயோ மெட்ரிக் எந்திரம் வழங் கப்பட்டுள்ளது என்றார்.

Related Tags :
Next Story