தென்காசியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


தென்காசியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 17 Jan 2019 3:00 AM IST (Updated: 16 Jan 2019 7:39 PM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

தென்காசி,

தென்காசியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–

வாலிபர் 

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் முத்துராஜ் (வயது 18). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று முத்துராஜ் தென்காசி கீழப்புலியூர் புலிக்குட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த பரமன் என்பவர் வீட்டின் மாடியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. மின்சாரம் தாக்கியதில் முத்துராஜ் தூக்கி வீசப்பட்டு மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

பலி 

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே முத்துராஜ் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்–இன்ஸ்பெக்டர் சின்னத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தென்காசியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story