திருச்செந்தூர் கோவிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா கடலில் புனித நீராடி பக்தர்கள் தரிசனம்


திருச்செந்தூர் கோவிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் வீதி உலா கடலில் புனித நீராடி பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 17 Jan 2019 3:15 AM IST (Updated: 16 Jan 2019 8:04 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சுவாமி வீதி உலா

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், மதியம் உச்சிகால தீபாராதனை நடந்தது.

மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தை சென்றடைந்தார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து மீண்டும் கோவிலை சேர்ந்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாமி தரிசனம்

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதிகாலையில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.


Next Story