மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் விடுதியில் வி‌ஷ மாத்திரை தின்ற கள்ளக்காதல் ஜோடி; பெண் சாவு வாலிபருக்கு தீவிர சிகிச்சை + "||" + Ate poisonous pill Counterfeit Love Couple Female death Intensive treatment for young people

கன்னியாகுமரியில் விடுதியில் வி‌ஷ மாத்திரை தின்ற கள்ளக்காதல் ஜோடி; பெண் சாவு வாலிபருக்கு தீவிர சிகிச்சை

கன்னியாகுமரியில் விடுதியில் வி‌ஷ மாத்திரை தின்ற கள்ளக்காதல் ஜோடி; பெண் சாவு வாலிபருக்கு தீவிர சிகிச்சை
கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் கள்ளக்காதல் ஜோடி வி‌ஷ மாத்திரை தின்றது. இதில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி தெற்கு ரதவீதியில் போலீஸ் நிலையம் அருகில் ஒரு விடுதி உள்ளது. கடந்த 14–ந் தேதி காலை 7 மணி அளவில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் அந்த விடுதிக்கு வந்தார். கன்னியாகுமரியை சுற்றி பார்க்க இருவரும் வந்துள்ளதாகவும், சில நாட்கள் இங்கு தங்க போவதாகவும் கூறி அறை கேட்டனர்.

முகவரி சான்றாக ஆதார் அட்டையின் நகலை அவர்கள் விடுதி நிர்வாகத்திடம் கொடுத்தனர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று விட்டு சிறிது நேரத்தில் அறையை விட்டு வெளியே சென்றனர். கன்னியாகுமரியில் பல இடங்களை சுற்றி பார்த்து விட்டு இரவு அறைக்கு திரும்பினர். மறுநாளும் அதேபோல் காலையில் சென்று விட்டு இரவு அறைக்கு திரும்பினர்.

நேற்று காலையில் அந்த ஜோடி தங்கி இருந்த அறை திறக்கப்படாமல் இருந்தது. ஒவ்வொரு அறையாக சென்று சாப்பிட ஏதாவது வேண்டுமா? என்று கேட்கும் விடுதி ஊழியர்கள், அந்த ஜோடி தங்கி இருந்த அறைக்கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை. ஆனால் அறைக்குள் இருந்து வாலிபரின் அலறல் சத்தம் மட்டும் கேட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விடுதி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். இளம் ஜோடி தங்கி இருந்த அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு போலீசார் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. வாலிபர் கையில் ரத்தம் வடிந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருடன் தங்கி இருந்த இளம்பெண் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது கையிலும் வெட்டுக்காயம் இருந்தது.

உயிருக்கு போராடிய வாலிபரை போலீசார் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்து கிடந்த அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து வாலிபர் முகவரி சான்றாக கொடுத்த ஆதார் அட்டை மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:–

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் அருகே நடுப்பாளையம் கருமாந்தூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). இவர் நம்பியூர் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கோபி செட்டிப்பாளையம் அருகே ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த காட்டுராஜா மனைவி கார்த்திகா (26). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கார்த்திகா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் வேலை வேலைக்கு செல்லும் போது சதீசுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

2 குழந்தைகளின் தாய் என்பதை மறந்த கார்த்திகா, சதீசுடன் பல இடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளார். கார்த்திகா, சதீசுடன் சுற்றுவது உறவினர்களுக்கு தெரிய வந்ததால், அவரால் மேற்கொண்டு கள்ளக்காதலை தொடர முடியவில்லை.

சதீசும், கார்த்திகாவை சந்திக்க முடியாமல் தவித்துள்ளார். இதனால் கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர். கடந்த 3–ந் தேதி இருவரும் ஊரை விட்டு புறப்பட்டு பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

இறுதியாக கடந்த 14–ந் தேதி கன்னியாகுமரிக்கு வந்த கள்ளக்காதல் ஜோடி அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். தங்களது காதலை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள், இருவரையும் பிரித்து விடுவார்கள் என்று நினைத்த இளம்ஜோடி தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். அதன்படி தென்னை மரத்துக்கு உரமாக வைக்கும் வி‌ஷ மாத்திரையை இருவரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தங்களது கையில் பிளேடால் இருவரும் மாறி மாறி வெட்டியுள்ளனர். சிறிது நேரத்தில் கார்த்திகா பரிதாபமாக இறந்தார். சதீஷ் உயிருக்கு போராடினார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கள்ளக்காதல் ஜோடி விடுதியில் வி‌ஷ மாத்திரை தின்ற சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே கார்த்திகாவை காணவில்லை என்று கோபி செட்டிப்பாளையம் போலீசில் அவரது குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் தேடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நகை தொழிலாளி கொலை: கள்ளக்காதலனுடன் மனைவி கைது போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
விழுப்புரத்தில் நகை தொழிலாளி கொலையில் கள்ளக்காதலனுடன் மனைவி கைது செய்யப்பட்டார்.
2. தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்தது: தலைமை ஆசிரியர் மகன் பலி
தடுப்புச்சுவரில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் தலைமைஆசிரியர் மகன் பரிதாபமாக இறந்தார்.
3. ஈரோட்டில் புதிய குப்பை கிடங்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
ஈரோட்டில் புதிய குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
4. கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்
மார்த்தாண்டம் அருகே வீட்டுக்கு தேவையான குடிநீரை பிடித்து வரும்போது, கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
5. திருவாரூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி லாரி மோதியது
திருவாரூரில் லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலியானார்.