மாவட்ட செய்திகள்

நாகூரில் கடலில் மூழ்கி மாணவர் பலி ஆந்திராவை சேர்ந்தவர் + "||" + A student drowned in the sea at Nagur Belonged to Andhra

நாகூரில் கடலில் மூழ்கி மாணவர் பலி ஆந்திராவை சேர்ந்தவர்

நாகூரில் கடலில் மூழ்கி மாணவர் பலி ஆந்திராவை சேர்ந்தவர்
நாகூரில் கடலில் மூழ்கி ஆந்திராவை சேர்ந்த பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

நாகூர்,

ஆந்திரா மாநிலம் சித்தூர் லாலு கார்டன் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் தனது குடும்பத்துடன் பொங்கல் விடுமுறையை கொண்டாடுவதற்காக நாகூருக்கு சுற்றுலா வந்தார். நேற்று முன்தினம் காலை நாகூர் தர்காவில் வழிபாடு செய்தார்.

தொடர்ந்து மதியம் இஸ்மாயில் தனது குடும்பத்தினருடன் நாகூரில் உள்ள கடற்கரைக்கு சென்றார். இஸ்மாயில் மகன் சபீர் (வயது16) கடலில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென எழும்பிய ராட்சத அலையில் சிக்கி சபீர் கடலில் மூழ்கினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் கடலில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் சபீரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது சபீர், கடலில் மூழ்கி பலியானது தெரியவந்தது.

அதே பகுதியில் கரை ஒதுங்கிய அவருடைய உடலை, நாகை கடலோர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சபீர் பிளஸ்–2 படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் விடுமுறையை கொண்டாட சுற்றுலா வந்த மாணவர், கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் அருகே தனியார் பஸ்–ஸ்கூட்டர் மோதல்; ஆசிரியை பலி
திருப்பூர் அருகே தனியார் பஸ்–ஸ்கூட்டர் மோதிய விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை பலியானார்.
2. ராஜபாளையத்தில் பரிதாபம் பள்ளிக்கு சென்ற பிளஸ்–1 மாணவர் லாரி மோதி சாவு
ராஜபாளையத்தில் லாரி மோதியதில், பள்ளிக்கு சென்ற பிளஸ்–1 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
3. மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாக்கடைக்குள் தவறி விழுந்து பேராசிரியர் சாவு
மோட்டார் சைக்கிளில் சென்ற பேராசிரியர் சாக்கடைக்குள் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
4. மனைவி இறந்த துக்கத்தில் கணவர் சாவு அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் சோகம்
திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் அடுத்தடுத்து கணவன் மற்றும் மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
5. கொடுமுடியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
கொடுமுடி அருகே ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

ஆசிரியரின் தேர்வுகள்...