வல்லூர் அனல் மின்நிலையத்தில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்


வல்லூர் அனல் மின்நிலையத்தில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
x
தினத்தந்தி 17 Jan 2019 4:00 AM IST (Updated: 17 Jan 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

வல்லூர் அனல் மின்நிலையத்தில் 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் வீதம் 1,500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

மீஞ்சூர்,

விதிமுறைகளை பின்பற்றாமல் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவதால் வல்லூர் அனல்மின் நிலையத்தில் மின்உற்பத்திக்கு ஐகோர்ட்டு தடை விதித்தது. இதனால் கடந்த 8–ந் தேதி முதல் அனல் மின்நிலையம் இயங்காததால் 1,500 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.

மத்திய அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து மின்உற்பத்தி சேவைக்கான தடையை நீக்கியதுடன், மீண்டும் இந்த வழக்கை நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்கும் என ஐகோர்ட்டு அறிவித்தது. இதையடுத்து வல்லூர் அனல் மின்நிலையத்தில் 1,500 மெகாவாட் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது.


Next Story