வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு சலுகையில் 24–ந்தேதிக்குள் பதிவு செய்யலாம் வேலை வாய்ப்பு அதிகாரி தகவல்
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு சலுகையில் 24–ந்தேதிக்குள் பதிவு செய்யலாம் என்று மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை,
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து 1.1.2011 முதல் 31.12.2016 வரையிலான காலத்தில் புதுப்பிக்காமல் விடுபட்டுள்ள பதிவுதாரர்களுக்கு உதவிடும் வகையில் சிறப்பு புதுப்பித்தல் சலுகையை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி இந்த சலுகை ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். அதுபோல 1.1.2011–க்கு முன்பு புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
எனவே மாவட்டத்தில் மேற்கூறிய காலத்திற்குள் பதிவினை புதுப்பிக்க தவறிய பதிவுதாரர்கள் வருகிற 24.1.2019–க்குள் தங்களது பதிவு அட்டை மற்றும் கல்வி சான்றுகளுடன் நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். மேலுமு தங்களது விடுப்பட்ட பதிவினை நிபந்தனைகளுடன் புதுப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.