காரைக்காலில் பரிதாபம்: ஆற்றில் மூழ்கி கொத்தனார் சாவு


காரைக்காலில் பரிதாபம்: ஆற்றில் மூழ்கி கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 17 Jan 2019 3:30 AM IST (Updated: 17 Jan 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் பேத்தி யுடன் விளையாடிய போது கொத்தனார் ஒருவர் ஆற்றில் மூழ்கி பலியானார்.

காரைக்கால்,

காரைக்கால் ஞானப்பிரகாசம் வீதி ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது70). கொத்தனார். சம்பவத்தன்று இவர் தனது 8 வயது பேத்தியுடன் காரைக்கால் அரசலாறு தடுப்பணை அருகே குளிக்க சென்றார். அப்போது அவருடைய பேத்தி ஆற்றங்கரையில் அமர்ந்திருந்தார். அவரிடம் விளையாட்டு காட்டுவதற்காக சொக்கலிங்கம் ஆற்றில் நீச்சல் அடித்துக் கொண்டிருந் தார். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக சொக்கலிங்கம் திடீரென ஆற்றில் மூழ்கி மாயமானார். இதையடுத்து சொக்கலிங்கத்தின் மகன் கருப்பன் மற்றும் உறவினர்கள் சொக்கலிங்கத்தை தேடினர். பல மணிநேரமாகியும் அவர் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக காரைக் கால் தீயணைப்பு நிலையம் மற்றும் நகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் போலீசார் மற்றும் மீனவர்கள் அங்கு சென்று ஆற்றில் மூழ்கி மாயமான சொக்கலிங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் சொக்கலிங்கம் ஆற்றில் மூழ்கி பலியானது தெரிய வந்தது.

மீனவர்கள் வீசிய வலையில் சிக்கிய அவருடைய உடலை, போலீசார் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நகர போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பேத்தியுடன் விளையாடியபோது கொத்தனார் ஒருவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story