செல்போனுக்கு அடிமையான சிறுமி தற்கொலை : தாய் கண்டித்ததால் விபரீதம்


செல்போனுக்கு அடிமையான சிறுமி தற்கொலை : தாய் கண்டித்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 16 Jan 2019 10:16 PM GMT (Updated: 16 Jan 2019 10:16 PM GMT)

தாய் கண்டித்ததால் செல்போனுக்கு அடிமையான சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பை,

மும்பை போய்வாடா பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 14 வயது சிறுமி, செல்போனில் வீடியோக்களை பார்ப்பதையும், அதை பதிவேற்றம் செய்வதையும் பொழுதுபோக்காக செய்யத்தொடங்கினாள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதுவே அவளது முழுநேர வேலையாக மாறியது. எந்நேரமும் செல்போனும் கையுமாகவே அமர்ந்து வீடியோக்களை கண்டு ரசித்துக்கொண்டு இருந்துள்ளார்.

இந்த செயல்பாடு சிறுமியின் தாய்க்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மகளின் தவறை அடிக்கடி கடிந்துகொண்டார். இருப்பினும் சிறுமி தொடர்ந்து அதையே செய்துவந்தாள்.

இந்தநிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுமி வீடியோவில் மூழ்கி இருப்பதை கண்ட தாய் அவளை கடுமையாக சத்தம்போட்டார்.

இதனால் மனமுடைந்த சிறுமி, அழுதபடியே வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டாள்.

நீண்டநேரம் ஆகியும் அவள் வெளியே வரவில்லை. தாய் குளியல் அறை கதவை தட்டியும் சிறுமி திறக்கவில்லை.

இதையடுத்து உதவிகேட்டு தாய் அலறினார். சத்தம்கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்தனர். அப்போது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள், சிறுமியை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 3 நாட்களாக உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தாள்.

செல்போனுக்கு அடிமையாகி சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story