சட்டவிரோத கால்சென்டருக்கு ‘சீல்’ : 8 பேர் கைது


சட்டவிரோத கால்சென்டருக்கு ‘சீல்’ : 8 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2019 4:05 AM IST (Updated: 17 Jan 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

அந்தேரியில் சட்டவிரோத கால்சென்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை அந்தேரி கிழக்கு சுரேன்ரோடு பகுதியில் சட்டவிரோதமாக கால்சென்டர் இயங்கி வருவதாக எம்.ஐ.டி.சி. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

இதில் அந்த கால்சென்டர் சட்டவிரோதமாக இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதன் மேலாளர் மற்றும் பெண் ஊழியர் உள்பட 8 பேரை பிடித்து கைது செய்தனர். 

மேலும் அங்கிருந்து 8 மடிக்கணினிகள், 12 செல்போன்கள், ரூ.4 லட்சம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். 

இதன் பின்னர் போலீசார் அந்த கால்சென்டரை இழுத்து மூடி சீல் வைத்தனர்.

Next Story